- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
சந்திரயான் 3 வெற்றி நாயகன் வீரமுத்துவேல் சம்பளம் என்ன தெரியுமா..?
உலகமே வியந்து பார்த்த இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதும், அதன் பின்பும் வெளியிடப்படும் ஆய்வு முடிவுகள், புகைப்படங்கள் அனைத்தும் மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இது அனைத்துமே ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் பட்ஜெட் - ஐ விட குறைவான தொகையில் செய்து முடித்துள்ளது தான் உலக மக்கள் வாயை பிளந்து பார்க்கும் விஷயமாக உள்ளது.
ADVERTISEMENT
இந்த மாபெரும் வெற்றி பணியின் பின்னணியில் உள்ள குழுவின் மூத்த அதிகாரிகளின் சம்பளம் மற்றும் அவர்கள் அனுபவிக்கும் சலுகைகள் பற்றி தான் பார்க்க போகிறோம். சந்திராயன் 3 குறித்து வரும் செய்திகளை மக்கள் தினமும் வியப்புடன் பார்த்து படித்து வரும் வேளையில், இந்த மாபெரும் வெற்றிக்கு பின் நிற்கும் மூத்த அதிகாரிகளின் சம்பளம் பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கிறது.
ADVERTISEMENT
இஸ்ரோ - வின் செயலாளரும் தலைவருமான எஸ் சோமநாத், சந்திரயான் 3 இன் திட்ட இயக்குநர் பி வீரமுத்துவேல் மற்றும் சந்திரயான் - 3 திட்டத்திற்கான துணைத் திட்ட இயக்குநராக இருந்த கல்பனா காளஹஸ்தி ஆகியோர் தான் சந்திரயான் 3 வெற்றிக்குப் பின்னால் இருந்த முக்கிய அதிகாரிகள் ஆவர்.
இஸ்ரோ அதிகாரிகளின் தனிப்பட்ட சம்பளம் வெளியிடப்படாது என்பதால் பொதுவாக இஸ்ரோ அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை பார்த்தால் ஒரு புரிதலுக்கு வர முடியும். அதன் படி இஸ்ரோவில் பொறியாளர்களுக்கு மாதம் ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை சம்பளம் பெறுகிறார்கள்.
ADVERTISEMENT
இதுவே மூத்த விஞ்ஞானிகளுக்கு ரூ.75,000 முதல் ரூ.80,000 வரை சம்பளம், இஸ்ரோவின் அதிதிறமையான விஞ்ஞானிகள் மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் பெறுகிறார்கள். மறுபுறம், சிறந்த விஞ்ஞானிகளுக்கு ரூ. 1,82,000 மற்றும் H பிரிவு பொறியாளர்களுக்கு மாதம் ரூ. 1,44,000, விஞ்ஞானி/பொறியாளர் - எஸ்ஜி ரூ.1,31,000 மற்றும் விஞ்ஞானி/பொறியாளர் - எஸ்எஃப் ரூ.1,18,000 பெறுகிறார்கள்.
இந்த வகையில் சந்திரயான் 3 இன் திட்ட இயக்குநர் பி வீரமுத்துவேல் அவருடைய அனுபவம், பதவி உயர்வு ஆகியவற்றை வைத்து கணக்கிட்டால் மாதம் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான சம்பளம் பெற கூடும் என கணிக்கப்படுகிறது. இது தோராயமாக கணக்கிடப்படும் அளவுகள் மட்டுமே.
ADVERTISEMENT
மேலும் இஸ்ரோ - வின்செயலாளரும் தலைவருமான எஸ் சோமநாத் போன்ற மூத்த அதிகாரிகளுக்கு சம்பளத்தை தாண்டி தங்குவதற்கான வீடு, கார், உதவியாளர்கள், வீட்டு பணியாளர்கள், போக்குவரத்து செலவுகள், எரிபொருள் செலவுகள், போன் பில், இண்டர்நெட் பில் போன்ற பல சலுகைகள் அரசு தரப்பில் இருந்து வழங்கப்படுகிறது.
மாத்திற்கு 4 முதல் 5 லட்சம் சம்பளம் என்பது இன்று ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் சிஇஓ அல்லது CXO பதவியில் இருக்கும் பலருக்கு கிடைக்கும் சம்பளமாக இருந்தாலும், இஸ்ரோ ஊழியர்கள் இந்தியாவுக்காக செய்யும் பணியை பாராட்டவும், கௌரவிக்கவும் வார்த்தைகள் போதது.
ADVERTISEMENT
இஸ்ரோவில் பிற பதவிகள் மற்றும் அந்த பதவிக்கான சம்பளம்
- தொழில்நுட்பவியலாளர் (டெக்னிஷன்) - B L - 3 பதவி - 21700 - 69100 ரூபாய்
- தொழில்நுட்ப உதவியாளர் L - 7 பதவி - 44900 - 142400 ரூபாய்
- அறிவியல் உதவியாளர் L - 7பதவி - 44900 - 142400 ரூபாய்
- நூலக உதவியாளர் 'A' - L - 7 பதவி - 44900 - 142400 ரூபாய்
- தொழில்நுட்ப உதவியாளர் (சவுண்ட் டெர்கார்டிங்) DECU அகமதாபாத் - L - 7 பதவி - 44900 - 142400 ரூபாய்
- தொழில்நுட்ப உதவியாளர் (வீடியோகிராபி) DECU - L - 7 பதவி - 44900 - 142400 ரூபாய்
- DECU - க்கான திட்ட உதவியாளர் - L - 8 பதவி - 47600 - 151100 ரூபாய்
- DECU - க்கான சமூக ஆராய்ச்சி உதவியாளர் - L - 8 பதவி - 47600 - 151100 ரூபாய்
- மீடியா லைப்ரரி அசிஸ்டென்ட் - ஏ டிஇசியூ - எல் - 7 பதவி - 44900 - 142400 ரூபாய்
- அறிவியல் உதவியாளர் - A (மல்டிமீடியா) DECU க்கான - L - 7 பதவி - 44900 - 142400 ரூபாய்
- இளைய தயாரிப்பாளர் - L - 10 பதவி - 56100 - 177500 ரூபாய்
- சமூக ஆராய்ச்சி அதிகாரி - C - L - 10 பதவி - 56100 - 177500 ரூபாய்
- விஞ்ஞானி/பொறியாளர் - SC - L - 10 பதவி - 56100 - 177500 ரூபாய்
- விஞ்ஞானி/பொறியாளர் - SD - L - 11 பதவி - 67700 - 208700 ரூபாய்
- மருத்துவ அதிகாரி - SC - L - 10 பதவி - 56100 - 177500 ரூபாய்
- மருத்துவ அதிகாரி - SD - L - 11 பதவி - 67700 - 208700 ரூபாய்
- ரேடியோகிராபர் - A - L - 4 பதவி - 25500 - 81100 ரூபாய்
- மருந்தாளுனர் - A - L - 5 பதவி - 29200 - 92300 ரூபாய்
- லேப் டெக்னீசியன் - ஏ - எல் - 4 பதவி - 25500 - 81100 ரூபாய்
- நர்ஸ் - பி - எல் - 7 பதவி - 44900 - 142400 ரூபாய்
- சகோதரி - A - L - 8 பதவி - 47600 - 151100 ரூபாய்
- கேட்டரிங் அட்டென்ட் 'ஏ' - எல் - 1 பதவி - 18000 - 56900 ரூபாய்
- கேட்டரிங் மேற்பார்வையாளர் - L - 6 பதவி - 35400 - 112400 ரூபாய்
- குக் - எல் - 2 பதவி - 19900 - 63200 ரூபாய்
- ஃபயர்மேன் - ஏ - எல் - 2 பதவி - 19900 - 63200 ரூபாய்
- டிரைவர் - கம் - ஆபரேட்டர் - ஏ - எல் - 3 பதவி - 21700 - 69100 ரூபாய்
- இலகுரக வாகன ஓட்டுநர் - A - L - 2 பதவி - 19900 - 63200 ரூபாய்
- கனரக வாகன ஓட்டுநர் - A - L - 2 பதவி - 19900 - 63200 ரூபாய்
- ஸ்டாஃப் கார் டிரைவர் 'ஏ' - எல் - 2 பதவி - 19900 - 63200 ரூபாய்
- உதவியாளர் - L - 4 பதவி - 25500 - 81100 ரூபாய்
- உதவியாளர் (ராஜ்பாஷா) - எல் - 4 பதவி - 25500 - 81100 ரூபாய்
- மேல் பிரிவு கிளார்க் - L - 4 பதவி - 25500 - 81100 ரூபாய்
- இளநிலை தனிப்பட்ட உதவியாளர் - L - 4 பதவி - 25500 - 81100 ரூபாய்
- ஸ்டெனோகிராஃபர் - L - 4 பதவி - 25500 - 81100 ரூபாய்
- நிர்வாக அதிகாரி - L - 10 பதவி - 56100 - 177500 ரூபாய்
- கணக்கு அதிகாரி - L - 10 பதவி - 56100 - 177500 ரூபாய்
- கொள்முதல் மற்றும் கடைகள் அதிகாரி - L - 10 பதவி - 56100 - 177500 ரூபாய்
- ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் - L - 6 பதவி - 35400 - 112400 ரூபாய்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment