மார்கெட்டே மிரளுது! வெறும் ரூ.21,999 போதும்.. 16GB ரேம்.. 64MP கேமரா.. 3D கர்வ்ட் டிஸ்பிளே.. என்ன மாடல்?

மார்கெட்டே மிரளுது! வெறும் ரூ.21,999 போதும்.. 16GB ரேம்.. 64MP கேமரா.. 3D கர்வ்ட் டிஸ்பிளே.. என்ன மாடல்?


இந்திய மார்கெட்டில் ரூ.30,000 பட்ஜெட்டில் வெளியாகும் போன்களில் கொடுக்கப்படும் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 16ஜிபி ரேம், சாம்சங் சென்சார் கேமரா போன்ற பிரீமியம் அம்சங்களுடன் வெறும் ரூ.21,999 விலைக்கு ஐக்யூ இசட் 7 ப்ரோ (iQOO Z7 Pro) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்யூ இசட் 7 ப்ரோ அம்சங்கள் (iQOO Z7 Pro Specifications): இந்த ஐக்யூ மாடல் 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) 3டி அமோலெட் (AMOLED) கர்வ்ட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10+ (HDR10+) சப்போர்ட் உள்ளது.

ADVERTISEMENT

iQOO Z7 Pro Specifications Price

அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. இந்த ஐக்யூ இசட் 7 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 4nm) சிப்செட் வருகிறது.

அதோடு மாலி - ஜி610 எம்சி4 ஜிபியு (Mali - G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஐக்யூ மாடல்களில் வரும் ஃபன்டச் ஓஎஸ் 13 (FunTouch OS 13) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐக்யூ போன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

ஆகவே, சாம்சங் ஜிடபுள்யூ3 (Samsung GW3) சென்சார் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டேப்த் சென்சார் (Depth Sensor) வருகிறது. இந்த கேமரா ஆரா லைட் (Aura Light) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த போன் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 4,600mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த ஐக்யூ மாடல் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், IP52 தர டஸ்ட் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட், பாட்டம் - போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers), இன் - டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (In-display Fingerprint Scanner) வருகின்றன. அதோடு டைப் - சி ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.3 மற்றும் வை-பை 6, ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

இந்த போன் ப்ளூ லாகூன் மற்றும் கிராபைட் மேட் ஆகிய 2 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருக்கும் இந்த போனின் விலை குறைந்தது ரூ.30,000 இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில், வெறும் ரூ.23,999 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இவ்வளவு கம்மியான பட்ஜெட்டில், 3டி கர்வ்ட் டிஸ்பிளே போன் வெளியாவது, இதுவே முதல்முறையாகும். இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 268 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போனின் விற்பனை வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அமேசான் (Amazon) மற்றும் ஐக்யூ.காம் (iQOO.com) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்துகொள்ளலாம். இந்த போனுக்கு அறிமுக சலுகையாக ரூ.2000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கி கார்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

ADVERTISEMENT

அதோடு 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகை வழங்கப்படுகிறது. பிரீமியம் டிசைன், 3டி கர்வ்ட் டிஸ்பிளே, பெஸ்ட் சிப்செட் போன்ற அம்சங்கள் கொண்ட மாடல் பட்ஜெட் விலையில் கிடைப்பதால், இந்த ஐக்யூ இசட் 7 ப்ரோ போனின் விற்பனை மிகப்பெரும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

iQoo Z7 Pro With 12GB RAM, 4600mAh Battery Sale From September 5 on Amazon Specifications, Price Offer











Comments